செய்திகள்

உயிருக்கு ஆபத்து உள்ளதால் துப்பாக்கி உரிமத்துக்கு விண்ணப்பித்துள்ளார் தோனி மனைவி சாக்‌ஷி!

இதனால் என் உயிருக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது. இந்நிலையில் எனக்குத் துப்பாக்கி உரிமம் வழங்கவேண்டும் என்று...

எழில்

துப்பாக்கி உரிமம் கோரி ராஞ்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மனு அளித்துள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவியான சாக்‌ஷி.

தன்னுடைய மனுவில் அவர் கூறியதாவது: நான் வீட்டில் பெரும்பாலும் தனிமையில் உள்ளேன். தனிப்பட்ட வேலைகளுக்காக வெளியேயும் செல்லவேண்டியுள்ளது. இதனால் என் உயிருக்கு ஆபத்து நேர வாய்ப்புள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு எனக்குத் துப்பாக்கி உரிமம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 0.32 ரக ரிவால்வர் அல்லது சிறிய ரக பிஸ்டல் வைத்துக்கொள்ள அவர் அனுமதி கூறியுள்ளார். 

2006-ம் ஆண்டு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி உரிமத்துக்கு விண்ணப்பித்தார் தோனி. இதையடுத்து அவருக்குத் துப்பாக்கி உரிமம், 2010-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT