செய்திகள்

யோ யோ தேர்வில் தேர்ச்சி: இங்கிலாந்து செல்கிறார் ரோஹித்

Raghavendran

இங்கிலாந்து செல்லும் இந்திய அணிக்கான ஃபிட்னஸ் தொடர்பான யோ யோ தேர்வு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்றது.

ரஷியாவில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்த தேர்வில் பங்கேற்க அவகாசம் அளிக்குமாறு ரோஹித் ஷர்மா, பிசிசிஐ-க்கு கோரிக்கை வைத்தார். இதனால் இதர வீரர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில் தோல்வியடைந்த அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக யோ யோ தேர்வில் தேர்ச்சியடைந்த சுரேஷ் ரெய்னா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக, ஐபிஎல் தொடரின் போது நடத்தப்பட்ட யோ யோ தேர்வில் ரோஹித் ஷர்மா தோல்வியடைந்தார். இதனால் அவரது ஃபிட்னஸ் குறித்து கேள்வி எழுந்தது. இதனிடையே இந்திய அணியின் துணைக் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், புதன்கிழமை நடத்தப்பட்ட யோ யோ தேர்வில் ரோஹித் ஷர்மா தேர்ச்சியடைந்தார். இதை தனது சமூக வலைதளப்பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். எனவே இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் ரோஹித் இடம் உறுதியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

SCROLL FOR NEXT