முகப்பு
செய்திகள்

தோனியின் ஹெல்மெட்டில் தேசியக் கொடி இடம்பெறாததன் காரணம் தெரியுமா?

கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கான நாட்டுப்பற்றை மேலும் வெளிப்படுத்த ஒருவாய்ப்பு கிடைத்தது.... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:25 PM
பகிர்:

சச்சின் டெண்டுல்கர் ஆரம்பித்து வைத்த விஷயம் இது. ஹெல்மெட்டில் தேசியக்கொடியை இடம்பெறச் செய்வது. இதன்மூலம் கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கான நாட்டுப்பற்றை மேலும் வெளிப்படுத்த ஒரு
வாய்ப்பு கிடைத்தது. கோலி ஹெல்மெட்டிலும் தேசியக்கொடியைக் காணமுடியும்.

ஆனால் தோனியின் ஹெல்மெட்டில் தேசியக் கொடி எப்போதும் இருக்காது. ஏன் தெரியுமா?

இதுகுறித்த கேள்விக்கு இணையத்தளம் ஒன்றில் ரசிகர் தெரிவித்த கருத்து சரியானதுதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோனி விக்கெட் கீப்பராகவும் இருப்பதால் எந்நேரமும் ஹெல்மெட் போட்டுக்கொண்டு இருக்கமுடியாது. சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போதுதான் ஹெல்மெட் அணிய நேரிடும். இதர நேரங்களில் அதை தனக்குப் பின்னால் புல்தரையில் வைக்கவேண்டியிருக்கும். தேசியக்கொடி பொருத்திய ஹெல்மெட்டை அதுபோல கீழே வைக்க தோனி விரும்பவில்லை. தேசியக் கொடிக்கு அளிக்கவேண்டிய மரியாதையை அதுபோன்ற சமயங்களில் அளிக்க முடியாமல் போகும் என்பதால் தன்னுடைய ஹெல்மெட்டில் அவர் தேசியக்கொடியைப் பொருத்திக்கொள்ளவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.