முகப்பு
செய்திகள்

ஒருநாள் போட்டி: 200 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய மகளிர் அணி! 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 200 ரன்கள் எடுத்துள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 200 ரன்கள் எடுத்துள்ளது.

வதோதராவில் நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.

உடல்நலக் குறைவு காரணமாக இந்திய கேப்டன் மிதாலி ராஜ் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. ஹர்மன்ப்ரீத் கேப்டனாகக் களமிறங்கியுள்ளார். மிதாலிக்குப் பதிலாக ஜெமிமா அறிமுகமாகியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் அற்புதமான பந்துவீச்சால் இந்திய அணி 50 ஓவர்களில் 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் பூஜா 51 ரன்களும் சுஷ்மா வர்மா 41 ரன்களும் எடுத்துள்ளார்கள். ஆஸ்திரேலிய அணியில் ஜெஸ் ஜோனாஸ்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.