முகப்பு
செய்திகள்

ஈடன் கார்டன்ஸில் மே.இ. அணிக்கு எதிரான டி20 போட்டி: கங்குலி

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:30 PM
பகிர்:

அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. 3 டெஸ்டுகள், 5 ஒருநாள் மற்றும் 1 டி20 ஆட்டங்களில் பங்கேற்கவுள்ளது. 

இந்தத் தொடர் குறித்த அட்டவணை இன்னமும் வெளியாகாத நிலையில் மே.இ. அணிக்கு எதிரான டி20 போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் என்று பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் ஐபிஎல் பிளேஆஃப் ஆட்டங்களை புணேவால் நடத்தமுடியாவிட்டால் அந்த ஆட்டங்கள் கொல்கத்தாவுக்கு ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.