முகப்பு
செய்திகள்

மியாமி ஓபன்:அரையிறுதியில் போட்ரோ-இஸ்னர் இன்று மோதல்

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் ஜே.எம்.டெல் போட்ரோவும்,

Updated On : 30 மார்ச், 2018 at 12:57 AM
பகிர்:

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஆர்ஜென்டீனாவின் ஜே.எம்.டெல் போட்ரோவும், அமெரிக்காவின் ஜான் இஸ்னரும் மோதவுள்ளனர்.
முன்னதாக, வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 20-ஆவது இடத்தில் இருக்கும் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை எதிர்கொண்டார் போட்ரோ.
இந்த ஆட்டத்தில் மூன்று செட்களும் 'டை பிரேக்கர்' சுற்று வரை சென்றது. இதனால், வெற்றி பெற இருவருமே கடுமையாகப் போராட வேண்டியதாக இருந்தது.
முதல் செட்டை 5-7 என்ற கணக்கில் இழந்த போட்ரோ, அடுத்த செட்டை 7-6 (7-1) என்ற கணக்கிலும், வெற்றியைத் தீர்மானிக்கும் 3-ஆவது மற்றும் இறுதி செட்டை 7-6 (7-3) என்ற கணக்கிலும் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆடவர் பிரிவு காலிறுதிச் சுற்றில் தென் கொரியாவின் சங் யியனை 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார் ஜான் இஸ்னர்.
ஜான் இஸ்னரும், போட்ரோவும் மோதும் ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
வெளியேறினார் வீனஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த அமெரிக்காவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவரான வீனஸ் வில்லியம்ஸ், 2-6, 3-6 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான டி.ஆர்.காலின்ஸிடம் வீழ்ந்தார். அரையிறுதியில் லாத்வியாவின் ஜலேனாவை வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறார் காலின்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.