முகப்பு
செய்திகள்

எனது வாழ்வில் இதுவரை இந்த தருணத்தை இழந்துவிட்டேன்: டேவிட் வார்னர்

ரசிகர்களாகிய உங்களின் உறுதுணைக்கு மிக்க நன்றி என ஆஸ்திரேலிய அணியின் தடை செய்யப்பட்ட வீரர் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

Updated On : 6 மே, 2018 at 1:07 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:28 PM

ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின் போது பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. வீரர்கள் வரம்பு மீறி தகாத வார்த்தைகளை பயன்படுத்தினர். மேலும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பென்கிராஃப்ட் ஆகிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தினர். இவர்கள் மீதான இந்த குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டு ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடமும், பென்கிராஃப்டுக்கு 9 மாதங்களும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தடை செய்யப்பட்ட துவக்க வீரர் டேவிட் வார்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு இவ்விவகாரத்தில் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூகத்தில் யாருக்காவது ஏதேனும் கெடுதல் நடந்தால், உடன் இருப்பவர்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது தான் வழக்கம். அதுதான் எனக்கும் நடந்தது. இதில் இருந்து நான் சிறந்த பாடம் கற்றுக்கொண்டேன். இனி என்னைப் போன்று தவிக்கும் நபர்களுக்கு அதிலிருந்து விடுபட உதவ விரும்புகிறேன். 

Advertisement

ஒவ்வொருவரும் இந்த இயந்திர வாழ்க்கையில் யதார்த்தத்தை மறந்துவிடுகின்றனர். அதுபோன்று நானும் கிரிக்கெட் விளையாட்டு, வெவ்வேறு நாடுகள், ஹோட்டல் அறைகள் என்று இருந்துவிட்டேன். தற்போது அதிலிருந்து விலக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சுயநலம் இருந்தாலும், எனது பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட முடிகிறது. அவர்களுக்கு சிறந்த தந்தையாக இருக்க முடிகிறது. எனது வாழ்வில் இதுவரை இந்த தருணத்தை இழந்துவிட்டேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.