இன்று ராஜஸ்தான்-கொல்கத்தா மோதல்
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் செவ்வாய்க்கிழமை இரவு மோதுகின்றன.
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் செவ்வாய்க்கிழமை இரவு மோதுகின்றன.
புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா 5-வது இடத்திலும், ராஜஸ்தான் 6-வது இடத்திலும், 12 புள்ளிகளுடன் உள்ளன. இந்த முக்கியமான ஆட்டத்தில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். தோல்வியடைந்தால் போட்டியில் இருந்து வெளியேறும் நிலை உள்ளது.
தொடர் தோல்விகளால் துவண்டிருந்த கொல்கத்தா அணி பஞ்சாப் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி 245/6 என அதிக ரன்களை குவித்து வென்றது. அதே போல் போட்டியில் இருந்து வெளியேறும் நிலையில் இருந்த ராஜஸ்தான் அணியும் மும்பையில் நடந்த ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி தொடர்ந்து களத்தில் உள்ளது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் பட்லர், ரஹானே, ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். மேலும் சஞ்சு சாம்சன், ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி ஆகியோர் சரிவர சோபிக்கவில்லை. பந்து வீச்சில் அந்த அணியின் ஆர்ச்சர், கெüதம், குல்கர்னி, உனதிகட், ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
கொல்கத்தா அணியில் கேப்டன் தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், ரஸ்ஸல், லீன், உத்தப்பா ஆகியோர் பேட்டிங்கிலும், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா, பிரசித் கிருஷ்ணா, சிவம் மவி ஆகியோர் பந்துவீச்சிலும் தங்கள் பங்கை சரியாக செய்து வருகின்றனர். இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் வாழ்வா-சாவா என உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடைபெறுவது நைட்ரைடர்ஸ் அணிக்கு கூடுதல் சாதகமான அம்சமாகும்.