செய்திகள்

ஆளைப் பார்த்தால் பெரிய ஹிட்டர் போல் தெரியவில்லை; ஆனால்...!: அம்பட்டி ராயுடுவை புகழ்ந்து தள்ளிய தோனி 

ஆளைப் பார்த்தால் பெரிய ஹிட்டர் போல் தெரியவில்லை; ஆனால் பெரிய ஷாட்களை ஆடும்போது பந்துகளை எல்லைக்கோட்டினைத் தாண்டி பறக்க விடுகிறார் என்று அம்பட்டி ராயுடுவை சிஎஸ்கே அணித்தலைவர் தோனி... 

DIN

மும்பை: ஆளைப் பார்த்தால் பெரிய ஹிட்டர் போல் தெரியவில்லை; ஆனால் பெரிய ஷாட்களை ஆடும்போது பந்துகளை எல்லைக்கோட்டினைத் தாண்டி பறக்க விடுகிறார் என்று அம்பட்டி ராயுடுவை சிஎஸ்கே அணித்தலைவர் தோனி புகழ்ந்துள்ளார்.

இதுதொடர்பாக தோனி கூறியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி பின் வருமாறு:

இந்த ஐபிஎல் 2018 தொடருக்கு முன்பே அணியில் நான் ராயுடுவுக்காக இடம் ஒதுக்க வேண்டியிருந்தது. ஏனெனில் நான் அவரைத் அவ்வாறான ஒரு உயர்ந்த தரநிலையில் வைத்திருக்கிறேன்.

பெரும்பாலான அணிகள் ஸ்பின்னர்களைக் கொண்டு எதிர் அணியின் தொடக்க வீரர்களை கட்டுப்படுத்தலாம்  என்று நினைக்கும்; ஆனால் ராயுடு ஸ்பின், வேகப்பந்து இரண்டைச் சமாளிப்பதில் சிறந்து விளங்குகிறார்.

ஆளைப் பார்த்தால் பெரிய ஹிட்டர் போல் தெரியவில்லை; ஆனால் பெரிய ஷாட்களை ஆடும்போது பந்துகளை எல்லைக்கோட்டினைத் தாண்டி பறக்க விடுகிறார்

ராயுடுவை தொடக்க வீரராக்கி, கேதார் ஜாதவ் மீண்டும் உடற்தகுதி பெற்று விட்டால் அவரை 4, 5 நிலையில் இறங்குவதே என்னுடைய திட்டம்

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT