செய்திகள்

'நாட்டை விட்டு வெளியேறு' விமர்சனங்களுக்கு கோலி பதிலடி

Raghavendran

அந்நிய நாட்டின் வீரர்களின் ஆட்டத்தை மட்டுமே விரும்பி பார்ப்பேன் எனக் கூறிய ரசிகரை, நாட்டை விட்டு வெளியேறுமாறு விராட் கோலி கூறியதாக எழுந்த விமர்சனம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் விராட் கோலிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

சமூக வலைதளங்களில் கேலிக்கு உள்ளாக்குவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அந்த இந்தியர்கள் குறித்து மட்டுமே நான் எனது விமர்சனத்தை முன்வைத்தேன். எனக்கான சுதந்திரம் இங்குள்ளது. எனவே இதை எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். அனைவருக்கும் எனது அன்பும், அமைதியும் இணைந்த வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT