செய்திகள்

ஐசிசி ஒரு நாள் தரவரிசை: கோலி, பும்ரா தொடர்ந்து முதலிடம்

DIN


ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பேட்டிங்கில் விராட் கோலியும், பெளலிங்கில் ஜஸ்ப்ரீத் பும்ராவும் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றனர்.
மே.இ.தீவுகளுடன் 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் முடிந்த நிலையில் ஐசிசி தற்போது ஒரு நாள் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது
அதன்படி பேட்டிங்கில் இந்திய கேப்டன் விராட் கோலி 899 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். துணை கேப்டன் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் உள்ளார். ஓபனர் ஷிகர் தவன் 8-ஆம் இடத்தில் உள்ளார். மகேந்திர சிங்தோனி 20-ஆவது இடத்தில் உள்ளார்.
பெளலிங்கில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா 841 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 
குல்தீப் யாதவ் மூன்றாவது இடத்திலும், சஹால் 5-ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஆல் ரவுண்டர்களில் ஆப்கன் வீரர் ரஷீத் கான் 353 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 
அணிகள் பட்டியலில் இங்கிலாந்து தொடர்ந்து 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 121 புள்ளிகளுடனும் இரண்டாம் இடத்தில் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT