செய்திகள்

நியூஸிலாந்தில் இந்தியா ஏ அணி: முதல் நாளன்று ஏமாற்றமளித்த முரளி விஜய், ரஹானே!

முதல் நாளன்று இந்தியா ஏ அணி 89.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்துள்ளது... 

எழில்

இந்தியா ஏ அணி நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது.

மவுண்ட் மெளன்கானியில் நடைபெற்று வரும் 4 நாள் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய டெஸ்ட் வீரர்களான பிருத்வி ஷா, முரளி விஜய், விஹாரி, ரஹானே, பார்தீவ் படேல் போன்ற வீரர்கள் இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மிகவும் எதிர்பார்த்த விஜய் 28 ரன்களும் ரஹானே 12 ரன்களும் மட்டும் எடுத்தார்கள். ஆனால் இதர வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். தொடக்க வீரர் பிருத்வி ஷா 88 பந்துகளில் 62 ரன்களும் விஹாரி 150 பந்துகளில் 86 ரன்களும் எடுத்தார்கள். மயங்க் அகர்வால் 65 ரன்கள் எடுத்தார். சற்று விரைவாக ரன்கள் எடுத்த பார்தீவ் படேல், 111 பந்துகளில் 79 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

முதல் நாளன்று இந்தியா ஏ அணி 89.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT