செய்திகள்

2-ஆவது டெஸ்டிலும் இலங்கை தோல்வி: தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

DIN

இலங்கையுடனான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 

இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 336 ரன்கள் எடுத்தது. 

46 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய 346 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், இலங்கை அணியின் வெற்றிக்கு 301 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இந்த இலக்கை நோக்கி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி 4-ஆவது நாள் ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அதன்பிறகு, மழை தொடர்ந்து நீடித்ததால் 4-ஆவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. 

இந்நிலையில், 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இன்றைய கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது. 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த டிக்வெலா மற்றும் தனஞ்ஜெயா ஆட்டத்தை தொடங்கினர். 

டிக்வெலா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய லக்மல் மற்றும் புஷ்பகுமாராவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 243 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இங்கிலாந்து அணியின் சார்பில் லீச் 5 விக்கெட்டுகளையும், மொயீன் அலி 4 விக்கெட்டுகளையும் மற்றும் ரஷீத் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

2-ஆவது இன்னிங்ஸில் சதம் அடித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-0 என்ற நிலையில் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. 

இருஅணிகளுக்கிடையிலான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT