செய்திகள்

மகளிர் டி20 உலகக் கோப்பை: காலை 5.30 மணிக்குத் தொடங்கும் இந்திய அணியின் அரையிறுதி ஆட்டம்!

மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி...

எழில்

மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்த ஆட்டம், ஆண்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 5.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. 

மே.இ.தீவுகளில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைப் போட்டி தற்போது அரையிறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நடப்பு சாம்பியன் மே.இ.தீவுகள் மோதுகின்றன. அந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை காலை 1.30 மணிக்குத் தொடங்குகிறது. இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து-இந்தியா மோதுகின்றன. இறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது, அதாவது இந்திய நேரப்படி ஞாயிறு காலை 5.30 மணிக்குத் தொடங்குகிறது. 

குரூப் பி பிரிவில் இந்திய அணி பலமான நியூஸியை 34 ரன்கள் வித்தியாசத்திலும், 3 முறை சாம்பியன் ஆஸி.யை 48 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அனைத்து ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பெற்றது. அதே நேரத்தில் குரூப் ஏ பிரிவில் இங்கிலாந்து அணி இரண்டாம் இடம் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தற்போது ஒரு நாள் உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக உள்ளது அந்த அணி.

கடந்த 2017 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி இறுதி ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியடைந்தது. அது முதல் இந்திய மகளிர் அணி தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறது. கடந்த 2009, 2010 டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அரையிறுதியோடு வெளியேறியதே இந்திய மகளிர் அணியின் அதிகபட்ச சாதனையாகும். தற்போது டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வெல்லவேண்டும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT