முகப்பு
செய்திகள்

பிசிசிஐயின் கட்டளையை மீறி அதிக ஓவர்கள் வீசியது ஏன்?: ஷமி விளக்கம்

எங்கோ பயிற்சி எடுப்பதை விடவும் உங்கள் அணிக்காக அதிக ஓவர்கள் வீசுவது நல்லது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:41 PM
பகிர்:

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியில் முகமது ஷமி இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் பெங்கால் அணிக்காக அவர் ரஞ்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறார். இதுதொடர்பாக, ஷமிக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதாக இருந்தால் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 15 ஓவர்கள் மட்டுமே வீசவேண்டும், தேவைப்பட்டால் கூடுதலாகச் சில ஓவர்கள் வீசிக்கொள்ளலாம் என ஷமிக்கு அறிவுறுத்தியுள்ளது பிசிசிஐ. ஆட்டத்தில் ஷமியின் பங்களிப்பு குறித்த விவரங்களைத் தினமும் அனுப்பவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரஞ்சி ஆட்டத்தால் ஷமியின் உடற்தகுதிக்குச் சிக்கல் எதுவும் நேரக்கூடாது என்பதால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஷமிக்கு விதித்துள்ளது பிசிசிஐ. இந்தக் கட்டுப்பாடுகளை பெங்கால் அணியும் ஏற்றுக்கொண்டுள்ளது. 

இந்நிலையில் கேரளாவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் அந்த அணியின் முதல் இன்னிங்ஸில் ஷமி 26 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பிசிசிஐ நிர்ணயித்த 15 ஓவர்களுக்கும் அதிகமாக 11 ஓவர்களை வீசியுள்ளார் ஷமி. இதுபற்றி அவர் கூறியதாவது:

மாநிலத்துக்காக விளையாடும்போது உங்களுக்கான பொறுப்பைப் பூர்த்தி செய்யவேண்டும். பந்துவீசும்போது எனக்கு எந்த அசெளகரியமும் ஏற்படவில்லை. நல்ல உடற்தகுதியுடனே பந்துவீசினேன். ஆடுகளமும் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்ததால் தொடர்ந்து பந்துவீச எண்ணினேன். அதிக ஓவர்கள் வீசவேண்டும் என்று நானே முடிவெடுத்தேன்.

எங்கோ பயிற்சி எடுப்பதை விடவும் உங்கள் அணிக்காக அதிக ஓவர்கள் வீசுவது நல்லது. இங்கு அதிகமாக வீச வீச அது எனக்கு ஆஸ்திரேலியாவில் உதவும். ஓர் ஆட்டத்தில் அதிக ஓவர்கள் வீசுவதுதான் நல்ல பயிற்சியாக அமையும். டெஸ்ட் தொடருக்கு நன்குத் தயாராகியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர், டிசம்பர் 6 முதல் தொடங்கவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →