நியூஸி. ஏ அணிக்கு எதிரான ஆட்டம்: விஜய் சங்கர் சிறப்பான பேட்டிங்!
தமிழக வீரர் விஜய் சங்கர் 78 பந்துகளில் 60 ரன்கள், சுப்மன் கில் 47 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
நியூஸிலாந்து வாங்கரேயில் நடைபெற்று வரும் இந்தியா ஏ - நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய ஏ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் நாளின் முடிவில் இந்திய ஏ அணி, 69 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.
ஈஸ்வரன் 56 ரன்களும் சம்ரத் 47 ரன்கள் எடுத்தார்கள். தமிழக வீரர் விஜய் சங்கர் 78 பந்துகளில் 60 ரன்கள், சுப்மன் கில் 47 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
Advertisement