முகப்பு
செய்திகள்

ஆஸ்திரேலியா தொடர்: முதல் டெஸ்டிலிருந்து பிருத்வி ஷா விலகல்!

இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா காயம் காரணமாக முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடுத்த வாரம் டிசம்பர் 6 முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா காயம் காரணமாக முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார். 

ஆஸ்திரேலிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்றபோது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பிருத்வி ஷாவைத் தூக்கிக்கொண்டு ஓய்வறைக்கு அழைத்துச் சென்றார்கள். பிறகு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஸ்கேன் செய்துபார்த்தபோது தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து பிருத்வி ஷா முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 

Advertisement

சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வரும் பிருத்வி ஷா, ஆஸ்திரேலியாவிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. இதனால் முதல் டெஸ்டில் முரளி விஜய்யும் கேஎல் ராகுலும் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments