முகப்பு
செய்திகள்

ஐஎஸ்எல் லீக்: பெங்களூரு அபார வெற்றி

ஐஎஸ்எல் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் புணே எஃப்சி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:39 AM
2 கோலடித்த சுனில் சேத்ரி.
பகிர்:


ஐஎஸ்எல் லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் புணே எஃப்சி அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெங்களூரு எஃப்சி அணி.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புணே பாலேவாடி மைதானத்தில் நடைபெற்றது. பெங்களூரு அணி தலா 1 வெற்றி, 1 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் புணே அணி தலா 1 தோல்வி, டிராவுடன் ஒரு வெற்றியைக் கூட இதுவரை பெறவில்லை. இந்த ஆட்டத்தில் கண்டிப்பாக வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் புணே களமிறங்கியது.
ஆனால் வலுவான பெங்களூரு அணி ஆட்டத்தை முழுவதும் தன் ஆதிக்கத்தை செலுத்தியது. 41-ஆவது நிமிடத்தில் நட்சத்திர வீரர் சேத்ரி முதல் கோலடித்தார். அதன் தொடர்ச்சியாக உடனே 43-ஆவது நிமிடத்திலும் மிகு அளித்த பாஸ் மூலம் அற்புதமாக இரண்டாவது கோலடித்தார் சேத்ரி. முதல் பாதி நிறைவில் 2-0 என பெங்களூரு முன்னிலை பெற்றிருந்தது.
எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பெங்களூரு அணியின் கையே ஓங்கி இருந்தது. 64-ஆவது நிமிடத்தில் மிகு கோலடித்தார். இதனால் 3-0 என முன்னிலை பெற்றது. பதில் கோலடிக்க புணே மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இறுதியில் 3-0 என பெங்களூரு வெற்றி பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.