முகப்பு
செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் டுவைன் பிராவோ!

புகழ்பெற்ற ஆல்ரவுண்டரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரருமான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:

புகழ்பெற்ற ஆல்ரவுண்டரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரருமான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

எனினும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

2004-ல் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும் 2016 செப்டம்பருக்குப் பிறகு அவர் சர்வதேசப் போட்டிகளில் எதுவும் பங்கேற்கவில்லை. 

35 வயதான பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளிலுக்கு முக்கியத்துவம் தருவதாலும் காயங்கள் காரணமாகவும் கிரிக்கெட் சங்கத்துடனான மோதல்களாலும் அவரால் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாட முடியாமல் போய்விட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →