செய்திகள்

மே.இ. அணியின் உதவிப் பயிற்சியாளராக முஷ்டாக் அகமது நியமனம்!

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் உதவிப் பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் உதவிப் பயிற்சியாளராக பாகிஸ்தான் முன்னாள் வீரர் முஷ்டாக் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனால் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார். மே.இ. அணி கிரிக்கெட் சங்கத்துடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, மே.இ. அணியுடன் இணைந்து வருடத்துக்கு 150 நாள்கள் முஷ்டாக் அகமது பணிபுரிய வேண்டும்.  

1990களில் முஷ்டாக் அகமது மிகவும் புகழ்பெற்ற சுழற்பந்துவீச்சாளராக இருந்தார். 52 டெஸ்டுகளிலும் 144 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக இதற்கு முன்பு அவர் பணியாற்றியுள்ளார்.

மே.இ. அணியின் பயிற்சியாளராக தற்போது உள்ள ஸ்டூவர்ட் லா, அடுத்து வருகிற வங்கதேசச் சுற்றுப்பயணத்துடன் தனது பணிக்காலத்தை நிறைவு செய்துவிடுவார். அதன்பிறகு இவர் இங்கிலாந்து கவுண்டி அணியான மிடில்செக்ஸ்-ஸின் பயிற்சியாளராகப் பணியாற்றவுள்ளார். இந்நிலையில் முஷ்டாக் அகமது மே.இ. அணியின் உதவிப் பயிற்சியாளராகத் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT