செய்திகள்

தடைக்குப் பின்பும் 95-ஆது இடத்தைப் பிடித்த ஸ்மித்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், சர்வதேச கிரிக்கெட்டில் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் 95-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 

Raghavendran

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், சர்வதேச கிரிக்கெட்டில் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் 95-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்தாண்டு மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்து சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக அப்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைக் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஒரு வருடம் தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது.

இதனால் ஆஸ்திரேலிய கேப்டன் பதவியை இழந்தது மட்டுமல்லாமல் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் நீக்கப்பட்டனர். மேலும் ஏற்கனவே செய்யப்பட்டிருந்த விளம்பர ஒப்பந்தங்களும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய நிதி பரிசீலனைக் குழு 2018-ஆம் ஆண்டின் அதிக வருமானம் ஈட்டும் இளம் பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டீவ் ஸ்மித் (வயது 29), 27 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சொத்துக்களுடன் இந்த பட்டியலில் 95-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 

இதில் சமீபத்தில் கூடைப்பந்து லீக் தொடரில் சிட்னி கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலிய கூடைப்பந்து வீரர் ஆண்ட்ரூ போகட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT