செய்திகள்

இந்தியா இமாலய வெற்றி: ஒருநாள் தொடரில் முன்னிலை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா இமாலய வெற்றிபெற்றது.

Raghavendran

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4-ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா இமாலய வெற்றிபெற்றது.

இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது ஆட்டம் த்ரில் டிராவில் முடிந்தது.

இதையடுத்து நடைபெற்ற 3-ஆவது போட்டியை மே.இ.தீவுகள் கைப்பற்றியது. எனவே இந்த தொடர் 1-1 என சமநிலைப் பெற்றது. இதனால் கடைசி 2 போட்டிகளில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையில் மும்பை பார்போன் மைதானத்தில் 4-ஆவது ஒருநாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 377 ரன்கள் குவித்தது. ரோஹித் ஷர்மா 162, அம்பத்தி ராயுடு 100 ரன்கள் விளாசினர்.

பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் அணி 36.2 ஓவர்களில் 153 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றிபெற்றது. கலீல் அகமது, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

ஆட்டநாயகனாக ரோஹித் ஷர்மா தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்த தொடரில் ஒரு ஆட்டம் மட்டுமே மீதமிருக்கும் நிலையில், இந்திய அணி 2-1 என முன்னிலைப் பெற்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT