ஸ்டம்புக்கு முன்னால் எப்படி நின்று ஒரு பந்துவீச்சை எதிர்கொள்ளவேண்டும் என்பது கிரிக்கெட்டின் பாலபாடம். ஆனால் ஆஸி. வீரர் ஜார்ஜ் பெய்லி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வித்தியாசமான பேட்டிங் ஸ்டான்ஸில் நின்று கவனம் ஈர்த்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரதமர் XI இடையிலான ஆட்டம் கேன்பெராவில் நடைபெற்றது. அப்போது பிரதமர் XI அணிக்குத் தலைமை தாங்கிய பெய்லி, பேட்டிங் செய்தபோது வித்தியாசமான பேட்டிங்ஸ் ஸ்டான்ஸில் நின்றுகொண்டு, பந்துவீச்சாளருக்குக் கிட்டத்தட்ட முதுகைக் காண்பித்தபடி பந்துவீச்சை எதிர்கொண்டார். பந்துவீச்சாளர் பந்துவீசிய பிறகு ஸ்டான்ஸை சற்று மாற்றி ஸ்டிரோக் அமைத்தார். சற்றே திரும்பியபடி நின்று பந்தை எதிர்கொண்டாலும் அதில் எந்தச் சிரமும் இல்லாமல் விளையாடினார் பெய்லி. அப்போது ஸ்லிப்பில் இருந்த டுபிளெஸ்ஸி இதைக் கண்டு சிரித்தபடி இதர அணி வீரர்களிடம் இதுகுறித்துப் பேசினார்.
எதனால் இப்படி நின்றுகொண்டீர்கள் எனக் கேட்டதற்கு பெய்லி அளித்த பதில் - பந்து ஸ்விங் ஆகும்போது என்னால் அதை எதிர்கொள்வதில் சிரமம் உள்ளது. எல்பிடபிள்யூ ஆகிவிடுகிறேன். மேலும் உள்ளூர் போட்டிகளில் இதுபோன்ற முயற்சிகளை எடுக்கலாம். என் பின்னங்காலை சைடாக வைத்துக்கொண்டு பந்தை எதிர்கொள்வதால் பந்து என்னை நோக்கி வரும்போது சற்று மாற்றிக்கொண்டு வேகமாகப் பந்தை அடிக்கமுடிகிறது. ஸ்விங்கை நன்கு எதிர்கொள்ள முடிகிறது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.