துளிகள்...
துளிகள்...
ஃபிஃபா சிறந்த கால்பந்து வீரர்களை தேர்வு செய்வதற்கான பட்டியலில் மெஸ்ஸி பெயர் சேர்க்கப்பட்டவில்லை. ரோனால்டோ, முகமது சலா ஆகியோர் பெயர் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற ஒடிஸா மாநில தடகள வீராங்கனை டூட்டி சந்துக்கு புவனேசுவரத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஆளுநர் கணேஷி லால் அவரை கெளரவித்தார்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தில்லி அணிக்கான கலந்தாலோசனை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் லேன்ஸ் குலுசனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஆர்தர் பெரைரா (70), புற்று நோய் காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார்.