செய்திகள்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணியில் மீண்டும் டேல் ஸ்டெயின்  

சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 

DIN

கேப் டவுன்: சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்பவர் டேல் ஸ்டெயின். இவர் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது தோள்பட்டையில் காயமடைந்தார். இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓய்வில் இருந்தார்.

பின்னர் இந்த வருடத் தொடக்கத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் களம் இறங்கினார். ஆனால் அப்போது காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. சமீபத்தில் இங்கிலாந்தில் கவுன்ட்டியில் விளையாடும்போது மீண்டும் ஒரு காயம் காரணமாக அவதிப்பட்டார்.

இந்நிலையில் சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியில் டேல் ஸ்டெயின் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 
 
தென்ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள தென்ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெயின் இடம்பிடித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT