செய்திகள்

புவனேஸ்வர் குமார், கேதர் ஜாதவ் அபாரம்: 162 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்

Raghavendran

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது. இதில் தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் துபை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை மோதுகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 43.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக பாபர் அசாம் 47, ஷோயிப் மாலிக் 43 ரன்கள் சேர்த்தனர். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணியின் பந்துவீச்சு அற்புதமாக அமைந்தது. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் அபாரமாக பந்துவீசி 7 ஓவர்களில் 1 மெய்டனுடன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். கேதர் ஜாதவ் 9 ஓவர்களில் 1 மெய்டனுடன் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பும்ரா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டும் எடுத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT