செய்திகள்

மகளிர் டி 20: 13 ரன்களில் இலங்கையை வென்றது இந்தியா

DIN


இலங்கைக்கு எதிரான மகளிர் டி 20 முதல் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
ஐசிசி சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஏற்கெனவே ஒரு நாள் ஆட்டத் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது. 
இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் புதன்கிழமை தொடங்கியது.
இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்களை குவித்தது. (ஜெமியா ரோட்ரிக்ஸ் 36, தனியா பாட்டியா 46, அனுஜா பட்டீல் 36, வேதா கிருஷ்ணமூர்த்தி 21), இலங்கை தரப்பில் உதேஷிகா, சமாரி அட்டப்பட்டு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இலங்கை அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
யசோதா மெண்டிஸ் 32, ஈஷானி லோகு 45, சமாரி அட்டப்பட்டு 27 ரன்களை எடுத்தனர். இந்திய தரப்பில் பூனம் யாதவ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டை வீழ்த்தினார். ராதா யாதவ், ஹர்மன்பிரீத் கெளர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதன் மூலம் 1-0 எனதொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT