செய்திகள்

நெ.1 டெஸ்ட் அணி: இந்திய அணிக்குக் கிடைக்கவுள்ள ரூ. 6.93 கோடி பரிசுத்தொகையும் தண்டாயுதமும்!

தொடர்ச்சியாக இந்த மூன்று வருடங்களாக நெ.1 டெஸ்ட் அணியான இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதம் கிடைத்து...

எழில்

ஏப்ரல் 1, 2019 நிலவரப்படி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு ஐசிசியின் தண்டாயுதமும் பரிசுத்தொகையான 6.93 கோடியும் கிடைக்கவுள்ளன.

இதற்கான அறிவிப்பை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதையடுத்து தொடர்ச்சியாக இந்த மூன்று வருடங்களாக நெ.1 டெஸ்ட் அணியான இந்திய அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதம் கிடைத்து வருகிறது. நியூஸிலாந்து அணிக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தண்டாயுதத்தை மீண்டும் பெறுவது பெருமைக்குரியதாக உள்ளது. எல்லாவகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலிடம் பிடிப்பது என்பது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கூறியுள்ளார் விராட் கோலி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

போலி தொழில்நுட்ப சேவை மோசடி: 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ஏர் இந்தியா விபத்தை சித்திரித்து துர்கா பூஜைக்கு வைக்கப்பட்ட அலங்கார பந்தலால் சர்ச்சை!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: இபிஎஸ் கண்டனம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT