செய்திகள்

பஞ்சாப் 163/7 

DIN

தில்லி அணிக்கு எதிராக 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை குவித்தது பஞ்சாப். அதன் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 69 ரன்களை விளாசினார்.
இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. தில்லி அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.
விக்கெட்டுகள் சரிவு
இதையடுத்து பஞ்சாப் தரப்பில் ராகுல், கெயில் களமிறங்கினர். ஆனால் தில்லி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ராகுல் 9, மயங்க் அகர்வால் 2 , டேவிட் மில்லர் 7 ரன்களுடன் வெளியேறினர். 
கெயில் 28-ஆவது அரைசதம் மறுமுனையில் கிறிஸ் கெயில் மட்டுமே அதிரடியாக ஆடி  28-ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார். 25 பந்துகளில் அவர் அரைசதத்தை பெற்றார். 
12-ஆவது ஓவரில் பஞ்சாப் அணி 100 ரன்களை கடந்தது. 5 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 37 பந்துகளில் 69 ரன்களை விளாசிய கெயிலை, அவுட் செய்தார் லேமிச்சேன். அவருக்கு பின் வந்த சாம் கரண் டக் அவுட்டானார்.  மந்தீப் சிங் 30 ரன்களுடன் அக்ஸர் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் அஸ்வின் 16 ரன்களுடன் ரபாடா பந்துவீச்சில் வெளியேறினார். 
ஹர்ப்ரீத் பிரார் 20, வில்ஜோயன் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இறுதியில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்தது பஞ்சாப்.
லேமிச்சேன் 3 விக்கெட் சந்தீப் லேமிச்சேன் 3-40, ரபாடா 2-23, அக்ஸர் பட்டேல் 2-22 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

புள்ளிகள் பட்டியல்

அணிகள்


சென்னை     9    7    2    14
மும்பை     10    6    4    12
தில்லி    9    5    4    10
பஞ்சாப்    9    5    4    10
ஹைதராபாத்    8    4    4    8
கொல்கத்தா    9    4    5    8
ராஜஸ்தான்    9    3    6    6
பெங்களூரு    9    2    7    4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

டாஸ்மாக் கடை ஊழியா் மீது தாக்குதல்

மேம்பால தடுப்பின் மீது அரசுப் பேருந்து மோதி 5 போ் காயம்

வணிகா் தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT