செய்திகள்

ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டி: தங்க மகன் பஜ்ரங் புனியா

DIN

ஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வென்றார் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா.
சீனாவின் ஸியாங் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை ஆடவர் ப்ரீஸ்டைல் பிரிவில் 65 கிலோ பிரிவு அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் சிரோஜித்தினை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற பஜ்ரங் இறுதிக்கு தகுதி 
பெற்றார்.
தங்கம் வென்றார் பஜ்ரங் புனியா: இறுதிச் சுற்றில் கஜகஸ்தானின் சயாட்பெக் ஓகஸ்úஸாவை 12-7 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார் பஜ்ரங்.
முதல் கட்ட ஆட்டத்தில் 2-5 என பின்தங்கி இருந்தார் அவர்.
2018 ஜகார்த்தா ஆசியப் போட்டி , காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த பஜ்ரங் தற்போது ஆசிய மல்யுத்த போட்டியிலும் தங்கம் வெனறுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் 79 கிலோ பிரிவில் பர்வீன் ராணா வெள்ளிப் பதக்கம் வென்றார். 97 கிலோ பிரிவில் சத்யவர்த் கடியன் வெண்கலம் வென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT