செய்திகள்

தடைக்குப் பிறகு திரும்பிய ஸ்மித் சதம்: கோலியை பின்னுக்குத் தள்ளி அபாரம்

DIN


இங்கிலாந்துடனான முதல் ஆஷஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஸ்டீவ் ஸமித் விராட் கோலி சாதனையை முறியடித்தார். 

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஆஷஸ் ஆட்டம் இன்று (வியாழக்கிழமை) பிர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து வேகங்களை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். வார்னர் 2, பான்கிராஃப்ட் 8, கவாஜா 13 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து, டிராவிஸ் ஹெட் ஸ்மித்துடன் ஒத்துழைத்து விளையாடி பாட்னர்ஷிப் அமைத்தார். ஆனால், இந்த பாட்னர்ஷிப்பும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 35 ரன்கள் எடுத்த ஹெட் வோக்ஸ் ஓவரில் ஆட்டமிழந்தார். 

அதன்பிறகு களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் சொதப்ப ஆஸ்திரேலிய அணி 122 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதையடுத்து, பீட்டர் சிடில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒத்துழைப்பு தர இந்த இணையும் நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தது. இதன்மூலம் ஸ்மித்தும் அரைசதம் கடந்தார். 

இந்த இணை 9-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சிடில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர் ஆட்டமிழக்கும்போது ஸ்மித் 85 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து, கடைசி விக்கெட் என்பதால் பெரும்பாலான ஸ்டிரைக்குகளை ஸ்டீஸ் ஸ்மித்தே எடுத்துக்கொண்டு துரிதமாக ரன் சேர்த்தார். இதன்மூலம், டெஸ்ட் அரங்கில் ஸ்டீவ் ஸ்மித் தனது 24-வது சதத்தை எட்டினார். 

சதம் அடித்தும் அவர் லயான் ஒத்துழைப்புடன் பவுண்டரிகளாக விளாசி வருகிறார். இதனால், 150 ரன்களை எட்டுமா என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி 270 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது. 

சதம் அடித்ததன் மூலம், குறைந்த இன்னிங்ஸில் 24-வது சதத்தை எட்டிய வீரர் என்ற சாதனை வரிசையில் கோலியை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். டான் பிராட்மேன் 66 இன்னிங்ஸில் 24-வது சதத்தை எட்டி முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோலி 123 இன்னிங்ஸில் 24-வது சதத்தை எட்டி இரண்டாவது இடத்தில் இருந்தார். ஆனால், ஸ்டீவ் ஸமித் தற்போது 118-வது இன்னிங்ஸில் 24-வது சதத்தை எட்டி கோலியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். 

குறைந்த இன்னிங்ஸில் 24 சதம்:

  • டான் பிராட்மேன் - 66 இன்னிங்ஸ்
  • ஸ்டீவ் ஸ்மித் - 118 இன்னிங்ஸ்
  • விராட் கோலி - 123 இன்னிங்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT