செய்திகள்

ஹாட்ரிக்குடன் ஆறு விக்கெட்டுகள் எடுத்து அசத்திய கே. கெளதம்: 2-வது இன்னிங்ஸில் தடுமாறும் இந்திய ஏ அணி! (விடியோ)

இந்த ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டுமென்றால் 2-வது இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 200 ரன்களாவது எடுக்கவேண்டும் என்கிற நிலைமை உள்ளது...

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. எனினும் 2-வது இன்னிங்ஸில் அந்த அணி தடுமாறி வருகிறது.

டிரினிடாட் டரெளபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 67.5 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் விஹாரி 55 ரன்களும் விக்கெட் கீப்பர் சஹா 62 ரன்களும் எடுத்து கெளரவமான ஸ்கோர் கிடைக்க உதவினார்கள். மே.இ. தீவுகள் அணித் தரப்பில் சிகே ஹோல்டர், அகிம் ஃபிரேசர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த மே.இ. தீவுகள் அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்தது. ஆனால், சுழற்பந்துவீச்சாளர் கே. கெளதம் அசத்தலாகப் பந்துவீசி மே.இ. தீவுகள் அணியை 194 ரன்களுக்குள் சுருட்டினார். கெளதம் ஹாட்ரிக்குடன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி மூன்று விக்கெட்டுகளும் ஹாட்ரிக் முறையில் வீழ்ந்தன. 

முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய ஏ அணி, 2-ம் நாள் ஆட்ட முடிவில் 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. நதீம் 5, ஷுப்மன் கில் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறவேண்டுமென்றால் 2-வது இன்னிங்ஸில் குறைந்தபட்சம் 200 ரன்களாவது எடுக்கவேண்டும் என்கிற நிலைமை உள்ளது. இதனால் 3-ம் நாள் ஆட்டம் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.80.24 லட்சத்தில் ‘சிறாா் அறிவியல் பூங்கா’ திறப்பு

வி.கே.புரம் அருகே முதியவரைத் தாக்கிய கரடி

குறை பிரசவ குழந்தைகளுக்கும் முழு ஆரோக்கியம் சாத்தியம்: டாக்டா் முகமது ரேலா

மேற்கு வங்கம்: இந்தியாவிலிருந்து வெளியேறும் வங்கதேசத்தினரின் எண்ணிக்கை அதிகரிப்பு- எல்லை பாதுகாப்புப் படை

தில்லி காா் வெடிப்பு: நாடாளுமன்றத்தில் பிரதமா் விளக்கமளிக்க வேண்டும்-காங்கிரஸ்

SCROLL FOR NEXT