செய்திகள்

ஆறரை அடி உயரம், 140 கிலோ எடை: ‘மெகா’ வீரரை டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்த மே.இ. தீவுகள் அணி!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அதிக எடை கொண்ட வீரர் என்கிற பெருமையை...

எழில்

26 வயது ரகீம் கார்ன்வெல். உயரம் - 6.6 அடி, எடை - 140 கிலோ.

இவர்தான் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வாகியுள்ள மே.இ. தீவுகள் அணியின் புதிய வீரர்.

ஆகஸ்ட் 22 முதல் தொடங்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக அல்ஸாரி ஜோசப் இடம்பெறவில்லை. 

கார்ன்வெல், 55 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி தனது சுழற்பந்துவீச்சின் மூலம் 260 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இரு அரை சதங்கள் அடித்தார். அவர் மே.இ. தீவுகள் அணியில் இடம்பிடித்தால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய அதிக எடை கொண்ட வீரர் என்கிற பெருமையைப் பெறுவார். உடற்தகுதி காரணமாக அவரை மே.இ. தீவுகள் அணியில் சேர்க்க யோசித்தார்கள். ஆனால் தன்னுடைய தொடர் பங்களிப்பின் மூலம் அணிக்குள் நுழைந்துவிட்டார். 

மே.இ. தீவுகள் அணி

ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிரைக் பிராத்வெயிட், டேரன் பிராவோ, புரூக்ஸ், ஜான் கேம்பல், ராஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வெல், ஷேன் டெளரிச் (விக்கெட் கீப்பர்), ஷனான் கேப்ரியல், ஹெட்மையர், ஷாய் ஹோப், கீமோ பால், கெமர் ரோச்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT