2019-ல் இடதுகை வேகப்பந்துவீச்சில் திணறும் ஷிகர் தவன்
ஒருநாள் போட்டிகளில் இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அதிகமுறை ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் நடப்பாண்டில் நடைபெற்றுள்ள ஒருநாள் போட்டிகளில் இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அதிகமுறை ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்துள்ளார்.
தற்போது வரை 16 இன்னிங்ஸ்களில் விளையாடி மொத்தம் 599 பந்துகள் வரை சந்தித்து 547 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்களும், 2 அரைசதங்களும் அடங்கும்.
இந்நிலையில், நடப்பாண்டில் மட்டும் இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு எதிராக 136 பந்துகளை சந்தித்துள்ள தவன், 97 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். குறிப்பாக 8 முறை இடதுகை வேகப்பந்துவீச்சுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
Advertisement
2019-ல் வேறு எந்த பேட்ஸ்மேனும் இடதுகை வேகப்பந்துவீச்சில் இத்தனை முறை ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.