செய்திகள்

முடிந்தது டிஎன்பிஎல் 2019: ஐபிஎல் வாய்ப்பு யார் யாருக்குக் கிடைக்கும்?

எழில்

திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்-சங்கர் சிமெண்ட் சார்பில் டிஎன்பிஎல் லீக் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய திண்டுக்கல் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. சேப்பாக் தரப்பில் பெரியசாமி அற்புதமாக பந்துவீசி 5-15 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருதுகளையும் அவர் பெற்றார்.

2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது சேப்பாக் அணிக்கு ரூ.1 கோடியும், திண்டுக்கல் அணிக்கு ரூ.60 லட்சமும் ரொக்கப் பரிசாக தரப்பட்டன.

இதையடுத்து இந்த டிஎன்பிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் மீது கவனம் குவிந்துள்ளது. டிஎன்பிஎல் போட்டியினால் சிலருக்கு ஐபிஎல் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதேபோல இந்தமுறையும் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களுக்கு ஐபிஎல் போட்டியில் வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்பில் 2019: அதிக ரன்கள்

  பெயர் ஆட்டங்கள்  ரன்கள்  ஸ்டிரைக்   ரேட் அதிக   ரன் சிக்ஸர்கள் 
 1 

 ஜெகதீசன்   (திண்டுக்கல்)

 10 448 137.42 105* 14
2

 முரளி விஜய் (திருச்சி) 

 4 359 148.96 101 16
3 அருண் கார்த்திக்   (மதுரை) 9 356 148.95 106 11
4 ஹரி நிஷாந்த்   (திண்டுக்கல்) 10 322 119.70 81* 18
5 கோபிநாத்   (சேப்பாக்கம்) 9 293 149.48 82 15

டிஎன்பில்: அதிக விக்கெட்டுகள்

  பெயர் ஆட்டங்கள்  விக்கெட்டுகள்  சிறந்த   பந்துவீச்சு
 1  பெரியசாமி (சேப்பாக்கம்) 9 21 5/15
 2

 கிரண் ஆகாஷ் (மதுரை)

 9 17 3/16
 3 ஹரிஷ் குமார்   (சேப்பாக்கம்) 9 16 4/13
 4 சிலம்பரசன் (திண்டுக்கல்) 10 14 4/13
 5 அலெக்ஸாண்டர்   (சேப்பாக்கம்) 9 13 5/9

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பெண்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது’

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

குடிமராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தல்

நீா்மோா் பந்தல்: பாஜகவினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

குருவாடி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

SCROLL FOR NEXT