செய்திகள்

ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்: கேப்டன் ஜோ ரூட் பெருமிதம்

வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பெருமிதம் தெரிவித்தார்.

Raghavendran

வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பெருமிதம் தெரிவித்தார்.

2-ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆர்ச்சரின் பந்துவீச்சு ஆஸ்திரேலிய வீரர்களை திணறடித்தது. குறிப்பாக துல்லிய பௌன்சர்கள் ஆஸி. வீரர்களை மிரட்டியது. ஸ்டீவ் ஸ்மித் போன்ற முன்னணி பேட்ஸ்மேன் கூட ஆர்ச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பயந்தது இந்தப் போட்டியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் பெருமிதம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இங்கிலாந்து பந்துவீச்சு முறையில் புதிய கோணத்தை ஆர்ச்சர் ஏற்படுத்தியுள்ளார். இதனால் ஆஸி. அணி அவரை எதிர்கொள்ள பல்வேறு திட்டங்களை கையாள வேண்டியிருந்தது. இதுவரை இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த வீரர்களில் இருந்து ஆர்ச்சர் சற்று வித்தியாசமனவராக உள்ளார். அதிலும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் ஆர்ச்ரை எதிர்கொள்ள எதிரணிக்கு சிறப்பு திறன் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT