செய்திகள்

இதர அணிகள் தங்கள் தரத்தை உயர்த்துவது எப்போது? சௌரவ் கங்குலி

Raghavendran

டெஸ்ட் போட்டிகளில் இதர அணிகள் தங்கள் தரத்தை உயர்த்துவது எப்போது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேள்வி எழுப்பியுள்ளார்.

5 போட்டிகள் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் 3 தினங்களுக்கு இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தினாலும், கடைசி 2 நாள்களில் சாதித்த ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது.

பின்னர் லார்ட்ஸில் நடைபெற்ற 2-ஆவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மழை குறுக்கீடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த டெஸ்ட் கடைசி நாள் ஆட்டம் வரை மிகவும் பரபரப்பாக நடந்தது. இரு அணிகளும் கடும் சவால்கள் அளித்தன. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வெற்றிபெறும் சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும், கடைசி வரை போராடிய ஆஸி. டிரா செய்தது.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, ஆஷஸ் தொடர் குறித்து ட்விட்டரில் பதிவிட்டதாவது:

ஆஷஸ் தொடர் டெஸ்ட் கிரிக்கெட்டை புத்துணர்ச்சி பெற வைத்துள்ளது. இதுபோன்று சிறப்பாக செயல்பட்டு தங்கள் தரத்தை உயர்த்தி டெஸ்ட் போட்டியை காக்க வேண்டிய கடமை இனி இதர அணிகளின் வசம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT