செய்திகள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் துணைப் பயிற்சியாளராக ஆஸி., முன்னாள் விக்கெட் கீப்பர் நியமனம்

ஐபிஎல் கிரிக்கெட்டில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

DIN


ஐபிஎல் கிரிக்கெட்டில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துணைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்து பயிற்சியாளர் டிரெவோர் பேலிஸ் கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த அணியின் துணைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 7 ஆண்டுகளாக ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த டாம் மூடி, அந்த அணியை 5 முறை பிளே-ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். 2016-இல் இவருடைய வழிகாட்டுதலில் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2019-இல் 12 புள்ளிகள் பெற்று அந்த அணி 4-ம் இடம் பிடித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT