செய்திகள்

ஜடேஜா அரைசதம்: முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

DIN


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் ஆட்டம் ஆண்டிகுவாவில் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. 

இந்நிலையில், ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆட்டம் தொடங்கிய சில நேரத்திலேயே ரிஷப் பந்த் 24 ரன்களுக்கு ரோச் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு, ஜடேஜாவும் இஷாந்த் சர்மாவும் நிதானமாக விளையாடி வந்தனர். இந்த இணை 8-வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் இஷாந்த் சர்மா 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய முகமது ஷமி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 

இதையடுத்து, பூம்ராவுடன் இணைந்து ஜடேஜா சற்று துரிதமாக ரன் சேர்த்து அரைசதத்தை எட்டினார். இதன்மூலம், இந்திய அணியும் 300 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணி 297 ரன்கள் எடுத்திருந்தபோது, 58 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் கீமர் ரோச் 4 விக்கெட்டுகளையும், ஷெனான் கேப்ரியல் 3 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டுகளையும் மற்றும் ஹோல்டர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

2-வது நாள் உணவு இடைவெளிக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT