செய்திகள்

ஃபெடரர் vs இந்திய வீரர்கள் ஆட்டங்களின் முடிவுகள் என்ன?

ரோஜர் ஃபெடரருக்கு எதிராக ஒரு செட்டை வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் சுமித் நாகல்... 

எழில்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகலை பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் தோற்கடித்துள்ளார்.

இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், 6-4 என முதல் செட்டை வென்று ஆச்சர்யப்படுத்தினார். ஆனால் அடுத்த மூன்று செட்களையும் வென்ற ஃபெடரர் 4-6, 6-1, 6-2, 6-4 என வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 

ரோஜர் ஃபெடரருக்கு எதிராக ஒரு செட்டை வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் சுமித் நாகல். இதற்கு முன்பு மூன்று முறை இந்திய வீரர்களிடம் மோதிய ஃபெடரர் ஒருமுறை கூட ஒரு செட்டையும் இழந்ததில்லை.

ஃபெடரர் vs இந்திய வீரர்கள்

ஃபெடரர் vs ரோஹன் பொபன்னா 7-6, 6-2 (2006)
ஃபெடரர் vs சோம்தேவ் தேவ்வர்மன் 6-3, 6-3 (2011)
ஃபெடரர் vs சோம்தேவ் தேவ்வர்மன் 6-2, 6-1, 6-1 (2013, பிரெஞ்சு ஓபன் 2-வது சுற்று)
ஃபெடரர் vs சுமித் நாகல் 4-6, 6-1, 6-2, 6-4 (2019, யு.எஸ். ஓபன் முதல் சுற்று)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விருதுநகரில் நாளை மின்தடை

முனைவா் பட்டம் பெற்ற பள்ளிக் கல்வி அமைச்சருக்கு காதா் மொகிதீன் வாழ்த்து

கரூா் மாவட்டத்தில் டிராகன் பழச்செடி விவசாயிகளுக்கு ரூ. 5 லட்சம் மானியம்!

பெரியாா் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் அா்ஜுன் சம்பத் ஆஜா்! இருதரப்பினரிடையே தள்ளு-முள்ளு!!

கரூா் சம்பவம்: தவெக பனையூா் அலுவலக உதவியாளா், 3 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

SCROLL FOR NEXT