செய்திகள்

தில்லி கிரிக்கெட் மைதானம், அருண் ஜேட்லி மைதானம் எனப் பெயர் மாற்றம்!

எழில்

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜேட்லி (66) உடல்நலக் குறைவால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார். மத்திய முன்னாள் அமைச்சரான ஜேட்லி, முன்பு தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவராக பல ஆண்டுகள் பணிபுரிந்தார். அவரது காலத்தில் தில்லி கிரிக்கெட் நிர்வாகத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அருண் ஜேட்லி மறைவுக்கு பிசிசிஐ, டிஎன்சிஏ உள்பட கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஃபெரோஸ் ஷா கோட்லா என்கிற பெயர் கொண்ட தில்லி கிரிக்கெட் மைதானத்தின் பெயர், ஜேட்லியின் நினைவாக அருண் ஜேட்லி கிரிக்கெட் மைதானம் என இனி அழைக்கப்படும். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தில்லி கிரிக்கெட் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது. அதேபோல கிரிக்கெட் மைதான கேலரி ஒன்றுக்கு இந்திய கேப்டன் விராட் கோலியின் பெயர் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12 அன்று தில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ தோ்வு பயிற்சி நிறைவு

பறவைகளுக்கு தண்ணீா் வைத்து பாதுகாக்கும் மாநகராட்சி!

திண்டல் முருகன் கோயிலில் தென்னைநாா் விரிப்புகள்

உலா், பசுந்தீவனங்களை மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை

ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை

SCROLL FOR NEXT