செய்திகள்

ரவிசாஸ்திரியை சமூகவலைதளத்தில் கிண்டலடித்த நெட்டிசன்கள்

ஆண்டிகுவாவின் கோகோ பே தீவு கடற்கரை பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்ட பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை நெட்டிசன்கள் சாடினர்.

DIN


ஆண்டிகுவாவின் கோகோ பே தீவு கடற்கரை பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சுட்டுரையில் (டுவிட்டர்) பதிவிட்ட பயிற்சியாளர் ரவிசாஸ்திரியை நெட்டிசன்கள் சாடினர்.
முதல் டெஸ்டில் மே.இ.தீவுகள் அணியை 318 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. 
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே 4 நாள்களிலேயே டெஸ்ட் வெற்றியை  பெற்றது இந்தியா. 
இந்நிலையில் அங்குள்ள கோகோ பே கடற்கரை பகுதியில் வெப்பம், வெப்பம், வெப்பம், பழரசம் குடிக்க நேரம், கோகோ பே அழகாக உள்ளது என படத்தின் கீழே குறிப்பிட்டிருந்தார்.
அதை பார்த்த நெட்டிசன்கள் சாஸ்திரியை கடுமையாக சாடியுள்ளனர். மிகப்பெரிய பீர் பாட்டில் படத்தை போட்டு ஒரு நெட்டிஸனும், விஸ்கியை அருந்துகள் என மற்றொருவரும் பீர் பாட்டிலை கையில் கொண்ட சாஸ்திரி படத்தை போட்டும், முதலில் உங்கள் உடல்தகுதியை கவனியுங்கள், நீங்கள் இந்திய பயிற்சியாளர், எனவும், உங்கள் தொப்பையை குறையுங்கள் எனவும், உங்கள் ஆடை ரசனையை மாற்றுங்கள் என வேறொருவரும் சாடி பதிவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

மங்காத்தா ரீ-ரிலீஸ்? இயக்குநர் அப்டேட்! ரசிகர்கள் ஆவல்!

பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் சாதனை நிகழ்த்திய பாட் கம்மின்ஸ்!

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT