செய்திகள்

ஒவ்வொரு பாலியல் குற்றவாளிக்கும் இதே தண்டனை வழங்கப்படுமா?: பிரபல பாட்மிண்டன் வீராங்கனை கேள்வி

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் கூறியதாவது:

எழில்

ஹைதராபாதைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர், கடந்த வியாழக்கிழமை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் லாரி பணியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டார்கள். நால்வருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த சட்டன்பள்ளிக்கு குற்றவாளிகள் நால்வரும் காவலர்களால் இன்று அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது அவர்கள் தப்பி ஓட முயன்றதால் நால்வரையும் காவலர்கள் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றார்கள். இச்சம்பவம் நாடு முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்களின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளும் விமரிசனங்களும் கிடைத்துள்ளன.

பிரபல பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா, இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் கூறியதாவது:

இது, வருங்கால பாலியல் குற்றவாளிகளைத் தடுத்து நிறுத்துமா? முக்கியக் கேள்வி. பாலியல் குற்றவாளி எவ்விதச் சமூக நிலையில் இருந்தாலும் இதே தண்டனை வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த சிறந்த பண்பாளர் நல்லகண்ணு: இபிஎஸ் இரங்கல்

SCROLL FOR NEXT