முகப்பு
செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் பங்குபெறும் வயதான வீரர்! சிஎஸ்கே இவரைத் தேர்வு செய்யுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். அனுபவம் கொண்ட வீரர் என்பதால்...

Updated On : 19 டிசம்பர், 2019 at 2:53 PM
பகிர்:

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

இந்த ஏலத்தில் பங்குபெறும் இளம் வீரர் என்கிற பெருமையை ஆப்கானிஸ்தானின் நூர் அஹமது பெற்றுள்ளார்கள். இடக்கை சுழற்பந்துவீச்சாளரான நூர், இதுவரை 7 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இவருடைய அடிப்படை விலை ரூ. 30 லட்சம்.

அதேபோல ஏலத்தில் பங்குபெறும் வயதான வீரர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் வீரரான பிரவீன் டாம்பே. 48 வயதான டாம்பே, ஐபிஎல் ஏலத்தில் பங்குபெறும் வயதான வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். இவருடைய அடிப்படை விலை, ரூ. 20 லட்சம். 

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். அனுபவம் கொண்ட வீரர் என்பதால் டாம்பேவைத் தேர்வு செய்ய சிஎஸ்கே ஆர்வம் காட்டுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.