முகப்பு
செய்திகள்

தமிழக அணிக்குத் திரும்பினார் கேப்டன் விஜய் சங்கர்!

தமிழக அணி முதல் இரு ரஞ்சி ஆட்டங்களில் கர்நாடகா, ஹிமாசல் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராகத் தோல்வியடைந்தது.

Updated On : 30 டிசம்பர், 2019 at 3:01 PM
பகிர்:

காய்ச்சல் மற்றும் மணிக்கட்டில் உண்டான காயம் காரணமாக கடந்த ரஞ்சிப் போட்டியில் இடம்பெறாத தமிழக அணி கேப்டன் விஜய் சங்கர், குணமடைந்து தமிழக அணியில் மீண்டும் இடம்பெறவுள்ளார்.

பெங்களூரில் உள்ள நேஷனல் கிரிக்கெட் அகாடமியில் விஜய் சங்கருக்கு உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சை அடைந்த விஜய் சங்கர், உத்தரப் பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்குபெறவுள்ளார். 

தமிழக அணி முதல் இரு ரஞ்சி ஆட்டங்களில் கர்நாடகா, ஹிமாசல் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராகத் தோல்வியடைந்தது. பிறகு மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்து ஒரு புள்ளி மட்டும் பெற்றது. இந்நிலையில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் விஜய் சங்கரின் வருகை அணிக்கு புதிய பலத்தை அளித்துள்ளது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.