செய்திகள்

அசத்திய இந்திய ஏ பந்துவீச்சாளர்கள்: 140 ரன்களுக்குச் சுருண்டு ஃபாலோ ஆன் ஆன இங்கிலாந்து லயன்ஸ் அணி!

எழில்

இந்திய அணியில் திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்பதற்கு இது இன்னொரு சான்று.

மைசூரில் நடைபெற்று வரும் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. முதல் நாளன்று இந்திய ஏ அணி, 3 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இந்திய ஏ அணி, 114.4 ஓவர்களில் 392 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முன்வரிசைகள் வீரர்கள் தவிர நடுவரிசை, பின்வரிசை வீரர்களில் விக்கெட் கீப்பர் பரத்தைத் தவிர இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். பரத் 46 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் சேப்பல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணி, 48.4 ஓவர்களில் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போப் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். இந்தியத் தரப்பில் சைனி, நதீம் தலா 3 விகெட்டுகளும் ஆரோன், ஜலஜ் சக்ஸேனா தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

ஃபாலோ ஆன் ஆன இங்கிலாந்து லயன்ஸ் அணி 2-ம் நாளின் முடிவில் தனது 2-வது இன்னிங்ஸில்விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 10 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 228 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT