செய்திகள்

கத்தார் ஓபன்: அரையிறுதியில் ஜோகோவிச்

DIN


கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
வியாழக்கிழமை இரவு நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஜார்ஜியாவின் நிக்கோலோஸ் பஷியாவில்லியை எதிர்கொண்ட ஜோகோவிச் 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 
மற்றொரு காலிறுதியில் ஸ்பெயின் வீரர் ராபர்டோ பவுடிஸ்டா 6-4, 6-4 என நேர்செட்களில் மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வார்விங்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். 
செக் குடியரசின் தாமஸ் பெர்டிக் 6-2, 6-4 என பிரான்ஸின் பியரி ஹியுக்ஸையும், இத்தாலியின் மார்கோ சென்சினாடோ 7-6, 6-2 என செர்பியாவின் துஸான் லஜோவிக்கையும் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT