செய்திகள்

இந்த உலகம் அழகானது: கே.எல். ராகுலின் நேர்மையைப் பாராட்டிய நடுவர்! (விடியோ)

எழில்

இந்த உலகில் எல்லோரும் நல்லவர்களாகவும் ஒருவருடைய நேர்மைக்கு அங்கீகாரம் அளிப்பவர்களாகவும் இருந்துவிட்டால் நம் வாழ்க்கைதான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்! இந்தச் சம்பவத்தை நேரிலும் விடியோவிலும் பார்த்தவர்களுக்கு இப்படித்தான் தோன்றியிருக்கும். 

சிட்னியில் ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் 15-வது ஓவரின் தொடக்கத்தில் ஜடேஜாவின் பந்தை முன்னேறி வந்து அடித்தார் ஹாரிஸ். அது சரியாக பேட்டில் படாமல் மிட் ஆனில் நின்றிருந்த கே.எல். ராகுல் பக்கம் சென்றது. ராகுலும் கேட்ச்சுக்காக முயன்றார். கீழே விழுந்தார். ஆனால் ஓரிரு அங்குலம் முன்னே விழுந்து அவரை ஏமாற்றியது பந்து. எனினும் பந்து தரையில் பட்ட கணத்தில் பிடித்தார் ராகுல். 

ஆனால் தூரத்திலிருந்து பார்த்தவர்களுக்கு ராகுல் கேட்ச்சைப் பிடித்தது போலவே இருந்தது. இதனால் ஜடேஜா மற்றும் இந்திய ஃபீல்டர்கள் பலரும் ஹாரிஸின் விக்கெட்டைக் கொண்டாடியபடி ராகுலை நோக்கி ஓடிவந்தார்கள். ஹாரிஸும் தலைக்கவிழ்ந்தபடி பெவிலியன் நோக்கி நகர ஆரம்பித்தார். ஆனால் உடனடியாக தான் கேட்ச் பிடிக்கவில்லை, பந்து தரையில் பட்டபிறகே பிடித்ததாக சைகையில் சொன்னார் ராகுல். இதனால் மூன்றாவது நடுவருக்குச் சென்று அதன்பிறகு அது கேட்ச் இல்லை என உறுதிபடுத்தப்படும் நிலையை அவர் தவிர்த்தார். 

ராகுலின் இந்த நேர்மையைக் கண்டு சிட்னி ரசிகர்கள் உடனடியாக கைத்தட்டிப் பாராட்டு தெரிவித்தார்கள். தன்னுடைய வேலையைச் சுலபமாக்கியதற்காகவும் நேர்மையான நடத்தைக்காகவும் ராகுல் பக்கம் திரும்பிக் கட்டைவிரலை உயர்த்திப் பாராட்டு தெரிவித்தார் கள நடுவர் இயன் குட். 

இந்த உலகம்தான் எவ்வளவு அழகானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT