இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் சிட்னியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இப்போட்யில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை இழந்து 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. புஜாரா 193, ரிஷப் பந்த் 159 ரன்களை குவித்தனர்.
தொடர்ந்து ஆடிய ஆஸி. அணி தனது முதல் இன்னிங்ஸில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்தினார். இந்திய அணி ஆஸி.யை விட 322 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஃபாலோ ஆன் அழைப்பு விடுத்துள்ளது.
போட்டியின் இடையே மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டத்தில் அவ்வப்போது தடை ஏற்பட்டு வருகிறது.
கடந்த 1947-48-இல் முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி இதுவரை ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. தற்போது அந்த சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.