முகப்பு
செய்திகள்

உலகின் நெ.1 குத்துச்சண்டை வீராங்கனை ஆனார் மேரி கோம்!

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேசக் குத்துச் சண்டைத் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் மேரி கோம்...

Updated On : 31 ஜனவரி, 2024 at 6:51 AM
பகிர்:

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் 6-ஆவது முறையாக தங்கப் பதக்கம் வென்று சாம்பியன் ஆனார். உலகப் போட்டிகளில் அவர் பெறும் 7-ஆவது பதக்கம் இதுவாகும்.

6 தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார் மேரி. அயர்லாந்தின் கேத்தி டெய்லரும் உலகப் போட்டிகளில் 5 தங்கம், ஒரு வெண்கலம் வென்றிருந்தார். மேரியும் 5 தங்கம், 1 வெள்ளிப்பதக்கத்துடன் 6 பதக்கங்கள் சமமாக இருந்த நிலையில் தற்போது 6-ஆவது முறையாக தங்கம் வென்று 7-ஆவது பதக்கத்துடன் அதிக பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற புதிய சாதனையை படைத்தார். 

இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேசக் குத்துச் சண்டைத் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார் மேரி கோம். இதையடுத்து சமூகவலைத்தளங்களில் அவருக்குப் பாராட்டுகள் குவிந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.